முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி பங்களாதேஷ் அணி 150 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
பின்னர் இறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டமுடிவில் 1 விக்கெட்டை இழந்து 86 ரன்கள் எடுத்து இருந்தது. களத்தில் புஜாரா 43 , மாயங்க் அகர்வால் 37 ரன்களுடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது.
தொடக்க வீரர் மயங்க் அகர்வாலின் சிறப்பான ஆட்டத்தால் 150 ரன்களை எடுத்தார்.அப்போது கேப்டன் விராட் கோஹ்லி டிரஸ்ஸிங் ரூமில் இருந்து சைகை காட்டினார்.அதில் மயங்க் அகர்வாலை இரட்டை சதத்திற்கு அடிக்குமாறு கூறினார்.
உடனே மயங்க் அகர்வால் கோஹ்லிக்கு கட்டைவிரலை உயர்த்தி ஓகே என பதிலளித்தார். மயங்க் அகர்வால் கேப்டன் சொல்லைதட்டாமல் இரட்டை சதம் விளாசினார். இறுதியாக அகர்வால் 243 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 6 விக்கெட்டை இழந்து 493 ரன்கள் எடுத்து இருந்தது.இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்க உள்ளது.
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…