வீடியோ: ஒற்றை கையால் கேட்சை பிடித்து மிரள வைத்த ஜடேஜா..!
இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டிவிசாகப்பட்டினத்தில் நடை பெற்றது.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 502 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.இதனால் இந்திய அணி 71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
2-வது இன்னிங்சில் இந்திய அணி 323 ரன்கள் இருக்கும்போது டிக்ளேர் செய்தது இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.இதனால் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் தொடக்க வீரரான ஐடன் மார்க்ராம் நிலைத்து நின்று விளையாடி கொண்டு இருந்தார்.அப்போது ஜடேஜா வீசிய பந்தை ஸ்ட்ரைட்டாக தூக்கி அடித்து பவுண்டரிக்கு அனுப்ப நினைத்தார்.ஆனால் அந்த பந்தை ஜடேஜா ஜம்ப் செய்து கேட்ச் பிடித்து மார்க்ரமை அவுட் ஆக்கினார். இதற்கு இந்திய வீரர்கள் அனைவருமே ஜடேஜாவை பாராட்டினர். அந்த வீடியோ இதோ..
That Jadeja caught and bowled is pretty ridiculous. He actually ended up making it look really easy but it’s a hell of a grab. pic.twitter.com/G0lJwTHbol
— Doc (@DocBrownCricket) October 6, 2019