இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்ற நோவாக் ஜோகோவிச் தீவிரம்.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டி நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜோகோவிச் 4-6, 6-2, 6-4,4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்த வெற்றியை தொடர்ந்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெட்வதேவை ஜோகோவிச் எதிர்கொள்கிறார்.
அடுத்த போட்டியை எனது வாழ்க்கையின் கடைசி போட்டி போல் விளையாட போகிறேன் என்று ஜோகோவிச் தெரிவித்தார். இன்னும் ஒரு போட்டி மட்டுமே உள்ளது. அதனால், முழு ஈடுபாடுடன் விளையாட உள்ளேன் என கூறினார்.
ஏற்கனவே 3 முறை அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற ஜோகோவிச் நான்காவது முறையும் வெல்வதற்கு தீவிரம் காட்டி வருகிறார். ஜோகோவிச் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…