கத்தாரில் பிஃபா கால்பந்து போட்டி நடைபெறவுள்ள மைதானத்தை பார்வையிட்ட மத்திய அமைச்சர்!
கத்தாரில் 2022 ஆம் ஆண்டில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், போட்டிகள் நடைபெறும் மைதானத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பார்வையிட்டார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கத்தார்க்கு கடந்த 27 ஆம் தேதி சென்றார். கத்தார் சென்ற அவர், இருநாட்டு உறவுகள் குறித்து பேசினார். பின்னர், 2022 ஆம் ஆண்டில் பிஃபா கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானமான “அகமது பின் அலி” மைதானத்தை பார்வையிட்டார்.
இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ள அவர், “அல் ரயானில் உள்ள அகமது பின் அலி மைதானத்தை பார்வையிட்டார். இந்த சிறப்பான மைதானத்தை கட்டமைத்த லார்சன் & டூப்ரோ மற்றும் அவர்களின் கட்டாரிய கூட்டாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தரம் மற்றும் விநியோகத்திற்கான இந்தியாவின் நற்பெயரை மேம்படுத்தியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
Visited Ahmed bin Ali Stadium at Al Rayyan. Congratulate Larsen & Toubro and their Qatari partners on an impressive project. Has enhanced India’s reputation for quality and delivery. Best wishes to Qatar for FIFA 2022 @FIFAWorldCup pic.twitter.com/F0LkfkGm4d
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 28, 2020