இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர்.
183 இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஓவரில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இலங்கை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதற்கு முன் நடந்த முதல் போட்டியில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.
இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் இறங்கிய முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்மூலம் சர்வேதேச டி20 கிரிக்கெட்டில் டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அஃப்ரிடியை பின்னுக்குத்தள்ளி இரண்டாமித்தை பிடித்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அஃப்ரிடி 8 முறை டக் அவுட் ஆகியுள்ளார். உமர் அக்மல் 9 முறை அவுட் ஆகியுள்ளார். இந்த பட்டியலில் இலங்கையின் முன்னாள் வீரர் திலகரத்னே தில்ஷான் 10 முறை டக் அவுட்டாகி முதலிடத்தில் உள்ளார்.
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…
டெல்லி : நேற்று உச்சநீதிமன்ற தலைமை வளாகத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தை (NJMA) தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.…
அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின்…