உக்ரைன்- ரஷ்ய போர்: வைரலாகும் ரஷ்ய டென்னிஸ் வீரர் கருத்து..!
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு மத்தியில் ரஷ்ய டென்னிஸ் வீரர் கேமரா லென்ஸில் நோ வார் ப்ளீஸ் (No War Please) எழுதினார் இது சமூக ஊடகங்களில் கடுமையாக வைரலானது.
ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டுள்ள உக்ரைன் உலகம் முழுவதிலும் இருந்து உதவிக்காக கெஞ்சுகிறது. ஆனால் இதுவரை உக்ரைனுக்கு எந்த பெரிய நாட்டிலிருந்தும் நேரடி உதவியைப் பெற முடியவில்லை. ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து நகரங்களை கைப்பற்றி வருகிறது. இதற்கிடையில், பலம் வாய்ந்த நாடாக இருந்தாலும் சரி பலவீனமான நாடாக இருந்தாலும் சரி போரை யாருக்கும் பிடிக்காது.
இந்நிலையில், ரஷ்ய டென்னிஸ் வீரர் போட்டி முடிந்ததும் உக்ரைன்-ரஷ்யப் போரைப் பற்றி கேமராவில் லென்ஸில் கருத்து ஒன்றை எழுதினார். அது தற்போது வைரலாக பரவிவருகிறது. அது என்னவென்றால் “நோ வார் ப்ளீஸ்” என எழுதினார். இந்த டென்னிஸ் வீரரின் பெயர் Andrey Rublev. இவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் இந்த டென்னிஸ் வீரரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
அனைத்து நாடுகளும், ஐ.நா.வும் எச்சரித்த போதிலும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைனைத் தாக்கி வருகிறது. இந்த தாக்குதல்களால் உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ரஷ்யா போன்ற இராணுவ சக்திக்கு முன்னால் உக்ரைன் இராணுவம் நீண்ட காலம் நீடிப்பது சாத்தியமில்லை. அத்தகைய சூழ்நிலையில், விரைவில் ரஷ்யா உக்ரைனின் பெரும்பாலான நகரங்களைக் கைப்பற்ற முடியும்.
ஆனால் ரஷ்யாவின் இந்த தாக்குதலால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இத்தனை பதட்டமான சூழலுக்கு மத்தியில ரஷ்ய டென்னிஸ் வீரர் ஒருவரின் இந்த செயல் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
✍️ “No war please” – @AndreyRublev97 pic.twitter.com/RxAsNk6vGw
— Séptimo Game (@Septimo_Game) February 25, 2022