UEFA Euro : யூரோ தகுதி சுற்று – ரொனால்டோ இல்லாத போர்ச்சுகல்.. லக்சம்பர்க்கிற்கு எதிராக பிரமாண்ட வெற்றி.!

Portugal team Captain Cristiano Ronaldo

54 உலக நாடுகள் 9 பிரிவுகளாக பங்கேற்கும் UEFA யூரோ தகுதி சுற்று கால்பந்து போட்டிகள் வருட மார்ச் மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் J பிரிவில் உள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியும், லாரன்ட் ஜான்ஸ் தலைமையிலான லக்சம்பர்க் அணியும் மோதுகின்றன.

இந்திய நேரப்படி இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்கியது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 5இல் வெற்றியை பெற்று முதலிடத்தில் உள்ளது போர்ச்சுகல் அணி. இன்று விளையாடிய போட்டியிலும் 9-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது.

ஆனால் இன்றைய போட்டியில் போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த முறை ஸ்லோவாக்கியாவுக்கு எதிரான போட்டியில் மஞ்சள் அட்டை பெற்ற காரணத்தால் இன்றைய போட்டியில் அவர் விளையாட அனுமதிக்கப்படவில்லை.

ரொனால்டோ இல்லாத காரணத்தால், அவருடைய இடத்தை போர்ச்சுகல் அணியின் வீரர்கள் பெர்னார்டோ சில்வா மற்றும் புருனோ பெர்னாண்டஸ் ஆகியோர் சிறப்பாக செயலாற்றினர். இந்த தகுதிச்சுற்று போட்டியானது அல்மான்சிலில் உள்ள எஸ்டாடியோ அல்கார்வ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 9-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதால் போர்ச்சுகல் அணி 6 வெற்றிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்