UEFA சாம்பியன் : ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றியை பெற்ற பிஎஸ்ஜி ..!
கால்பந்தில் நடைபெற்று வரும் யுஇஎப்ஏ (UEFA) சாம்பியன் தொடரின் இரண்டு வார இடைவேளைக்கு பிறகு அடுத்த சுற்றான ரவுண்டு அப் 16 நேற்று தொடங்கியது. இதில் ரியல் சோசிடாட் (Real Sociedad) அணி பிஎஸ்ஜி (PSG ) அணியை எதிர்த்து விளையாடியது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி 2-0 என்ற கோல் கணக்கில் (PSG) அணி வெற்றி பெற்றது.
விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ரியல் சோசிடாட் அணியின் வீரரான சில்வா அடித்த ஷாட் ஒன்று கோல் போஸ்டில் பட்டு கோல் விழாமல் போனது. இதனால் கோல் அடிக்கும் வாய்ப்பை ரியல் சோசிடாட் அணி இழந்தது.
#INDvENG : ரோஹித், ஜடேஜா அதிரடி சதம்! முதல் நாள் முடிவில் இந்தியா 326 ரன்கள் குவிப்பு!
அதன் பிறகு ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணியின் நட்சத்திர வீரரான கிலியான் எம்பாப்பே (Kylian Mbappe) அடித்த ஒரு அற்புதமான ஷாட்டை அடித்தார் இருப்பினும் ரியல் சோசிடாட் கோல் கீப்பர் மிரட்டலாக அவர் அடித்த பந்தை தடுத்தார். இப்படி முதல் பாதியில் இரு அணிகளின் கோல் முயற்சிகளும் வீணாகவே போனது. இதனால் ஆட்டத்தின் முதல் பாதி 0-0 என்ற கணக்கில் சமநிலையில் நிறைவு பெற்றது.
இடைவேளைக்கு பிறகு தொடங்கிய இரண்டாம் பாதியில், ஆட்டத்தின் 58 வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணிக்கு ஒரு கார்னெர் கிக் கிடைத்தது. அந்த கார்னர் கிக்கில் வந்த பந்தை தொலைவில் நின்று கொண்டிருந்த கிலியான் எம்பாப்பே ஓடி சென்று மின்னல் வேகத்தில் அந்த பந்தை உதைத்து கோலுக்கு அனுப்பினார்.
இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் பிஎஸ்ஜி அணி முன்னிலை வகுத்தது. அதன் பிறகு ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணி வீரர் பிராட்லி பார்கோலா இரண்டாவது கோல் அடித்து அசத்தினார். பிஎஸ்ஜி அணிக்கு பதிலடி கொடுக்க முடியாமல் ரியல் சோசிடாட் அணி இறுதி வரை போராடி தோற்று போனது. இதனால் பிஎஸ்ஜி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்து அபார வெற்றியை பெற்றது.