பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி -இருகரம் கூப்பிய ட்ரம்ப்
அமெரிக்காவில் நவ.,3ந்தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.இந்நிலையில் அதிபர் டிரம்பும் மற்றும் மனைவி மெலனியாவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த அக்1ந்தேதி உறுதிசெய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டு நிலையிலும் டிரம்புக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததன் காரணமாக அவர் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக் வந்தார்.அங்கிருந்தே அலுவலக பணிகளைக் கவனித்து வந்த டிரம்ப் கடந்த4 நாட்களுக்கு பின் அக்.,5ந்தேதி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
உடல் நலம் குறித்து பல தகவல்கள் வெளியாகவே ட்ரம்பே தனது உடல்நலம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் நான் முற்றிலும் நலமாக இருப்பதாகவும், அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் அதிபர் டிரம்புக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை முடிவடைந்ததாக அக்.,10ந்தேதி வெளியானது.இதனால் அவர் தனது அரசு பணிகளை மீண்டும் தொடங்குவார் என்று வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் சீன் கான்லி தகவல் தெரிவித்தார்.
கொரோனா சிகிச்சைக்கு பின் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து பேசியதாவது:நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று டிரம்ப் பேசினார்.
.