இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இந்த தொடருக்கான தகுதிச்சுற்றில் விளையாடிய பிரான்ஸை சேர்ந்த டென்னிஸ் வீரர் எலியட் பெஞ்செட்ரிட் என்பவர் வாழைப்பழத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது டென்னிஸ் போட்டிகளில் பந்துகளை எடுப்பதற்காக சிலர் சேர்க்கப்படுவார்கள். பந்து எடுப்பவர்களுக்கு பெரும்பாலும் டென்னிஸ் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள், பின்னர் டென்னிஸ் அனுபவத்திற்காக அவர்கள் பந்துகளை எடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
இந்நிலையில், டென்னிஸ் போட்டியின் நடுவே ஓய்வில் அமர்ந்திருந்த போது பிரான்ஸ் வீரர் எலியட் பெஞ்செட்ரிட் சாப்பிடுவதற்கு தன்னிடமிருந்த வாழைப்பழத்தை எடுத்தார். அப்போது அங்கு பந்துகளை எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுமியை கூப்பிட்டு, தன்னிடமிருந்த வாழைப்பழத்தை கொடுத்து அதை உரித்து தரும்படி கேட்டுள்ளார், பின்னர் அந்த பெண் டென்னிஸ் வீரர் கேட்கிறார் என்று, நினைத்து அந்த சிறுமியும் வாங்க இதனை திடீரென கண்ட நடுவர் ஜான் ப்ளோம் உடனடியாக அந்த சிறுமியை பார்த்து பழத்தை திரும்ப அந்த வீரரிடமே அளிக்கும்படி கூறினார், அந்த சிறுமியும் உடனடியாக வீரரிடம் திரும்ப கொடுத்துவிட்டது.
பின்னர் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் பலரும் வீரரின் செயலுக்கு கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். சிலர் அந்த சிறுமி வீரர்களின் வேலைக்காரர்கள் இல்லை என்றும், அவரின் வேலையை மட்டும் பார்க்க விடுங்கள் என்றும், அவர்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். மேலும் நடுவரின் செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…