117 நாட்களுக்கு பின் நடைபெறவிருந்த முதல் கிரிக்கெட் போட்டியான இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையே நடைபெறவிருந்த முதல் டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக டாஸ் தாமதமாக வீசவுள்ளனர்.
இங்கிலாந்து-வெஸ்டிண்டிஸ் நாட்டிற்கு இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளதாக அறிவித்தது. அந்த தொடரின் முதல் போட்டி, இன்று முதல் தொடங்குகிறது. 117 நாட்களுக்கு பிறகு நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் தொடரில், கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்கள் மைதானத்தில் போட்டிகளை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும், ஐசிசி விதித்த புதிய கட்டுப்பாடுகளான, பந்து மீது எச்சிலை தேய்க்ககூடாது, பந்தை தொட்ட பிறகு கிருமி நாசினி வைத்து கைகளை சுத்தம் செய்வது, போன்ற கட்டுப்பாடுகளை, இந்த போட்டியில் அமலில் வருகிறது. இந்த போட்டியானது, இங்கிலாந்து, சவுதம்டனில் உள்ள ரோஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கவிருந்தது.
இந்த போட்டிக்காக ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில், அங்கு தற்பொழுது மழை பெய்து வருவதால், டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அங்கு மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் இந்த போட்டியில் ஜோ ரூட்டிற்கு பதில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்ட்ரோக்ஸ் அணியை வழிநடத்தவுள்ளார்.
விளையாடும் வீரர்கள்:
இங்கிலாந்து:
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிபிலி, ஜோ டென்லி, ஜாக் கிராலி, ஒல்லி போப், டொமினிக் பெஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.
வெஸ்ட் இண்டீஸ்:
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஷேன் டோவ்ரிச் (விக்கெட் கீப்பர்), ஜான் காம்ப்பெல், கிரெய்க் பிராத்வைட், ஷாய் ஹோப், ஷமர் ப்ரூக்ஸ், ரோஸ்டன் சேஸ், ராகீம் கார்ன்வால், அல்சாரி ஜோசப், கெமர் ரோச், ஷானன் கேப்ரியல், செமர் ஹோல்டர், நக்ருமா பொன்னர், ரேமான் ரீஃபர், ஜெர்மைன் பிளாக்வுட்.
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…