டோனியும் கங்குலியும் ஒன்று தான் – வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான்!
இந்தியாவின் கிரிக்கெட் பிளேயர்களைப் பொருத்தவரை தோனியா அல்லது சௌரவ் கங்குலியா என்று அடிக்கடி இவர்கள் இருவர் பெயரை வைத்து ரசிகர்கள் சண்டை போடுவது வழக்கம். இந்நிலையில், இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் அவர்கள் பேசியுள்ளார்.
அவர் பேசும்பொழுது, ரசிகர்கள் கங்குலி தான் பெரியவர் தோனி தான் பெரியவர் என்று மாறி மாறி விவாதிப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் நான் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் நுழைந்து இருந்தாலும், தோனி தலைமையிலான உலக கோப்பை வென்ற அணியில் இடம் பிடித்தவர் என கூறியுள்ளார்.
மேலும் சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட தொடங்குகையில் கேப்டனாக கங்குலி இருந்ததால், அறிமுகமாகிய வீரர்களுக்கு அவர் கொடுத்த ஊக்கமும் உந்துதலும் சிறப்பாக இருந்தது. இதனால் பலர் உயர்வான நிலைக்கு வந்தனர். அதேபோல தோனி நீண்ட காலமாக அணியை வழிநடத்தி வந்ததால், அவர் மூத்த வீரர்களுடன் தான் பல காலம் பணியாற்றினார்.
ஆனால் நாட்கள் செல்ல பழைய வீரர்கள் ஓய்வு பெறத் தொடங்கியதும் புதிய வீரர்கள் அணிக்குள் நுழைய தொடங்கினார்கள். அப்போது கங்குலி என்ன செய்தாரோ அதையே தான் டோனியும் செய்தார். இருவருமே இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றவர்கள். எனவே இருவருமே ஒரே மாதிரி முக்கியமானவர்கள் தான் என இவர்கள் குறித்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் தெரிவித்துள்ளார்.