பாரிஸ் ஒலிம்பிக் : நாளை 6-வது நாள் .. இந்திய அணியின் போட்டிகள் என்னென்ன?
பாரிஸ் ஒலிம்பிக் : நடப்பாண்டில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி இதுவரை 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. மேலும், 6-வது நாளான நாளையும் இந்திய அணிக்கு ஒரு பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து நாளைய இந்திய அணி போட்டிகளையும் பார்க்கலாம்.
கோல்ஃப் :
- நாளை மதியம் 12.30 மணி அளவில் கோல்ஃப் தனி நபருக்கான முதல் சுற்று போட்டியில் ககன்ஜீத் புல்லர், சுபங்கர் ஷர்மா விளையாடவுள்ளனர்.
துப்பாக்கி சுடுதல் :
- நாளை மதியம் 1 மணிக்கு 50மீ ரைபிள் ஆண்களுக்கான தனி நபருக்கான இறுதிப் போட்டியானது நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி சார்பாக ஸ்வப்னில் குசலே களம் காணுகிறார். இதனால் இந்த போட்டியில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் எதிர்பார்க்கலாம்.
- நாளை மதியம் 3 மணிக்கு 50மீ ரைபிள் பெண்களுக்கான தனி நபர் தகுதி சுற்று போட்டியில் இந்திய அணியின் சார்பாக சிஃப்ட் கவுர் சாம்ரா, அஞ்சும் மவுட்கில் விளையாடவுள்ளனர்.
ஹாக்கி :
- நாளை மதியம் 1.30 மணிக்கு இந்திய ஆண்கள் அணிக்கும், பெல்ஜியம் ஆண்கள் அணியும் லீக் சுற்றின் 21-வது போட்டியில் விளையாடவுள்ளனர்.
குத்து சண்டை :
- நாளை மதியம் 2.30 மணிக்கு பெண்களுக்கான தனிநபர் 50 கி குத்து சண்டை போட்டியின் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்திய அணி சார்பாக ஜரீன் நிகாத்தும், சீனா அணி சார்பாக வூயூயும் விளையாடவுள்ளனர்.
வில்வித்தை :
- நாளை மதியம் 2.30 மணிக்கு ஆண்களுக்கான வில்வித்தை எலிமினேஷன் போட்டியில் இந்திய அணியின் சார்பாக பிராவின் ரமேஷ் சீனாவின் வென்சாவோவை எதிர்த்து விளையாடவுள்ளார்.