பாரிஸ் ஒலிம்பிக் : ஓய்வை அறிவித்த டாம் டேலி..! மகனுக்காக மீண்டும் விளையாடி பதக்கம் வென்று அசத்தல்!!

Tom Daly

பாரிஸ் ஒலிம்பிக் : உலக நாடுகள் பங்கேற்று விளையாடும் ஒலிம்பிக் தொடரின் 33-வது தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிசில் நடைபெற்று வருகிறது. பல வீரர், வீராங்கனைகள் பதக்கங்களுக்காக தங்கள் நாட்டை நிலை நிறுத்த வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக விளையாடி வருகின்றனர்.

அதன்படி, கடந்த 15 வருடங்களாக ஒலிம்பிக் போட்டிகளில் ஒலிக்கும் பெயர் தான் டாம் டேலி. பிரிட்டன் நாட்டை சேர்ந்த இவர் தனது 14 வயதில் ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கினார். கடந்த 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்ஸ் தொடரில் 10 மீட்டர் தண்ணீர் சாகச விளையாட்டில் களமிறங்கி தனி பிரிவில் விளையாடி 7 ஆம் இடம் பிடித்தார்.

அதன் பின் தொடர்ச்சியாக 2011-ம் ஆண்டு தன்னுடைய தந்தை இறந்த நேரத்திலும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரின் போது 10 மீட்டர் தண்ணீர் சாகச விளையாட்டில் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.

அதன் பின் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் தொடரின் 10 மீட்டர் தண்ணீர் சாகச விளையாட்டில் அணி பிரிவில் வெண்கலமும், 2020-ல் நடந்த ஒலிம்பிக்கில் அணி பிரிவில் தங்கமும், தனி வீரர் பிரிவில் வெண்கலமும் வென்றார்.

2013-ம் ஆண்டு லான்ஸ் பிளாக் என்ற ஆணை திருமணம் செய்தார். இதனால் மிகவும் பிரபலம் ஆனார். தற்போது வாடகைத்தாய் மூலமாக இவருக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். அதன் பிறகு கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு பின் ஓய்வை அறிவித்துவிட்டு அவரது குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

அதன்பின் தனது சமூக வலைதளத்தில் ஒலிம்பிக் வீரராக உருவாகுவது எவ்வளவு கடினம் என்ற வீடியோவை பார்த்து கொண்டு இருக்கையில், அவரது மகன் ‘உங்களை மீண்டும் ஒலிம்பிக்கில் பார்க்க வேண்டும்’ என கூறி இருக்கிறார்.

இதனாலேயே 1 வருடம் அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் தற்போது நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் கலந்து கொண்ட இவர் 10 மீட்டர் தண்ணீர் சாகச விளையாட்டில் வெண்கல பதக்கம் வென்று அசத்தி உள்ளார். இதனாலே இந்த சம்பவம் சற்று வியப்படையும் ஒன்றாக பார்க்கப்படுகிறது என்றே கூறலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
pahalgam ipl bcci
Union minister Amit shah visit Anantnag dt hospital
JK Pahalgam Terror Attack
CSK - CEO
PM Modi Soudi to Delhi visit
thirumavalavan amit shah