TOKYO2020:ஒலிம்பிக் வரலாற்றில் ஃபென்சிங் முதல் போட்டியில் தமிழக வீராங்கனை வெற்றி..!ஆனால்…!
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஃபென்சிங்(வாள் சண்டை) போட்டியில் பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெற்றி பெற்றார்.ஆனால்,இரண்டாவது சுற்றில் என்ன நடந்தது?
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த இரண்டு நாட்களாக ஒலிம்பிக் போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில், இன்று காலை முதல் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
முதல் சுற்று – வெற்றி:
இந்நிலையில்,இன்று நடைபெற்ற ஃபென்சிங் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி,துனிசியா நாட்டை சேர்ந்த நாடியா பென் அஸிஜியை எதிர்கொண்டார்.போட்டியின் தொடக்கத்தில் இருந்து பவானி தேவி ஆதிக்கம் செலுத்தி 8-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.
இதனையடுத்து,பவானி தேவி தனது எதிர்ப்பாளரான அஸிஜியை 2 சுற்றுகளுக்கு மேல்,அவரை மேற்கொண்டு புள்ளிகள் பெற விடாமல்,துல்லியமாக தாக்கியது மட்டுமல்லாமல்,சில ஸ்மார்ட் தொடுதல்களினால் தனது புள்ளிகளையும் சேகரித்தார்.
இறுதியில்,பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.இதனால்,ஒலிம்பிக்கில் ஃபென்சிங் முதல் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய மற்றும் தமிழக வீராங்கனையாக பவானி தேவி உள்ளார்.ஏனெனில்,இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு ஃபென்சிங் பெண்கள் பிரிவில் யாரும் தேர்வானது இல்லை.
History, domination, class – What dream debuts are made of for Bhavani Devi ????????#Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion | @IamBhavaniDevi pic.twitter.com/nkz96Spv1m
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 26, 2021
இரண்டாவது சுற்று: வெற்றியா?-தோல்வியா?
முதல் சுற்றில் வெற்றியை பதித்த பவானி,இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை மனோன் ப்ருநட்டை எதிர்கொண்டார்.மனோன் ப்ருநட் உலகின் நம்பர் 3 ஃபென்சிங் வீராங்கனை ஆவார். அவர் ஆரம்பம் முதலே பவானி தேவியை அட்டாக் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.மேலும்,அவர் 11 புள்ளிகள் பெற்ற நிலையில் பவானி தேவி எந்த புள்ளிகளும் பெறவில்லை.
இதனையடுத்து,புள்ளிகள் எடுக்க தொடங்கிய பவானி வேகமாக 7 புள்ளிகள் வரை பெற்றார்.இருப்பினும்,மற்றொரு பக்கம் பிரான்சின் மனோன் ப்ருநட் 15 புள்ளிகளைவரை பெற்றிருந்தார்.எனவே,15 புள்ளிகளை முதலில் எடுப்பவர்தான் வெற்றிபெற்றவர் என்பதால்,மனோன் ப்ருநட் 15 -7 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றுள்ளார்.இதனால்,பவானி தேவி தோல்வியுற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டார்.
Bhavani Devi bowed out of the #Fencing second round at #Tokyo2020 against World No. 3 Monon Brunet 7-15 of #FRA
She becomes the first #IND fencer to qualify for the #Olympics and to win a first round match ????????#UnitedByEmotion | #StrongerTogether | @IamBhavaniDevi pic.twitter.com/MePtsTjoI5
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 26, 2021