TOKYO2020:பிவி சிந்து,இந்திய ஹாக்கி அணி காலிறுதிக்கு முன்னேற்றம்…!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் பிவி சிந்தும்,ஹாக்கி போட்டியில் இந்திய அணியும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 6 நாட்களாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
பிவி சிந்து:
அதன்படி,கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற பேட்மிண்டன் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து,இஸ்ரேலின் போலிகர்போவை 21-7,21-10 என்ற கணக்கில் வெறும் 28 நிமிடங்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதனைத் தொடர்ந்து,நேற்று நடைபெற்ற குரூப் ஜே பேட்மிண்டன் போட்டியில் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையும், 2016 ரியோ வெள்ளிப் பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து, ஹாங்காங்கின் சியுங் ந்கன் யினை 21-9,21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 16 வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
காலிறுதிக்கு முன்னேற்றம்:
இந்நிலையில்,டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று காலை நடைபெற்ற பேட்மிண்டன் 16 வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து,டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை வெறும் 41 நிமிடங்களில் 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.இந்த வெற்றியின் மூலம், டோக்கியோ ஒலிம்பிக் 2020 காலிறுதிப் போட்டியில் பிவி சிந்து ஒரு இடத்தைப் பெற்றுள்ளார்.
What. A. Commanding. Performance. ????
Here’s the winning point from the Round of 16 clash between #IND‘s PV Sindhu and #DEN‘s Mia Blichfeldt.#Olympics | #Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion | #BestOfTokyo | #Badminton | @Pvsindhu pic.twitter.com/yuWylT4ihs
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 29, 2021
இந்திய ஹாக்கி அணி:
கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து,26 ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாம் நாள் லீக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி கோல் ஏதும் அடிக்கவில்லை.இதனால்,1-7 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய ஹாக்கி அணி வெற்றி பெற்றது.
இருப்பினும்,நேற்று முன்தினம் நடைபெற்ற 3 ஆவது லீக் போட்டியில் இந்திய ஆண்கள் அணி,ஸ்பெயின் அணியை எதிர்கொண்டு,3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
வெற்றி:
இந்நிலையில்,இன்னும் சில நல்ல செய்திகள் என்னவென்றால்,இந்தியாவின் ஆண்கள் ஹாக்கி அணி, பூல் ஏ போட்டியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.மேலும்,குருப் ஏ பிரிவு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதுவரை ஆண்கள் ஹாக்கியின் குருப் ஏ பிரிவில் 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வியை தழுவியுள்ளது.
नाम विवेक, गुण अनेक! ????
Be it dodging his opponents to a T or gaining the lead for #IND with a crucial deflection, this young midfielder made no mistakes in #IND‘s 3-1 win over #ARG ????#BestOfTokyo | #Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion | #Hockey pic.twitter.com/htpx4kiGwl
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 29, 2021
இன்று நடைபெற்ற போட்டிகளில் இந்தியா காலிறுதிக்கு முன்னேறுவதால், பதக்கத்தை நோக்கிய ஒரு வெற்றி பயணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.