TOKYO2020: ஈட்டி எறிதலில் சாதித்த நீரஜ் சோப்ரா – இறுதிப் போட்டிக்கு தகுதி..!வீடியோ உள்ளே..!
டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆண்கள் ஈட்டி எறிதல் தகுதி சுற்றுப் போட்டிகள் இன்று காலை நடைபெற்றது.இதில்,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ஏனெனில், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற 83.50 மீ ஈட்டி எறிந்தால் போதும்,ஆனால் ,நீரஜ் தனது முதல் முயற்சியிலேயே 86.65 மீட்டர் தூரத்தில் ஈட்டியை எறிந்து குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்து சாதனைப் புரிந்துள்ளார்.அதன்படி, இறுதிப்போட்டி, வரும் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.
We’ll keep our ???? ready!!
To watch @Neeraj_chopra1 shooting for the Moon. What a fantastic first #OlympicGames throw????#TeamIndia #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India https://t.co/lM3mguM02t
— Team India (@WeAreTeamIndia) August 4, 2021
அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்பது இதுவே முதல் முறை,இருப்பினும்,தனது சிறப்பான முயற்சியின் மூலம் நீரஜ் சோப்ரா,இறுதி போட்டிக்கு முன்னேறி இந்தியாவுக்கு பதக்கத்தைப் பெற்று கொடுக்கும் வாய்ப்பை தக்க வைத்துள்ளார். மேலும்,ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில்,இந்திய வீரர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.
நீரஜ் சோப்ரா:
இவர் இந்திய இராணுவத்தில் ஜூனியர் கமிஷன்ட் அதிகாரி (JCO) ஆவார்.நீரஜ் 2016 உலக U-20 சாம்பியன்ஷிப் போட்டிகளில் 86.48 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்தார். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கான தொடக்க விழாவில் சோப்ரா கொடியைத் தாங்கியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பின்னர்,ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் ஈட்டி எறிதலில் 88.06 மீ தூரத்திற்கு எறிந்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இவர் டோக்கியோ ஒலிம்பிக் தகுதி போட்டியில் 87.86 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிவ்பால் சிங்:
அதேப் போல,ஒலிம்பிக் ஈட்டி எறிதல் தகுதிப் போட்டியின் பி பிரிவில் இந்தியாவின் ஷிவ்பால் சிங் தனது முதல் இரண்டு வீசுதல்களில், அவர் 76.40 மீ மற்றும் 74.80 மீ பதிவு செய்தார்.மூன்றாவது முயற்சியில் 74.81 மீ எறிந்தார்.இதனால்,12 வது இடத்தை பெற்று அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.
#TeamIndia | #Tokyo2020 | #Athletics
Men’s Javelin Throw Qualifications ResultsShivpal Singh bowed out after his best attempt of 76.40m placed him 12th in Group B! Spirited effort by @shivpaljavelin in his debut #OlympicGames ???? #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/Fo02CSLU3J
— Team India (@WeAreTeamIndia) August 4, 2021