TOKYO2020:மல்யுத்த போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் தீபக் புனியா..!

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆண்கள் 86 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா,நைஜீரியாவின் அகியோமோரை எதிர்கொண்டார்.ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய தீபக்,இப்போட்டியின் இறுதியில் 12-1 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
What a start to the day for #IND
Second seed Deepak Punia advances to the quarterfinals after a dominant 12-1 win against #NGR‘s Ekerekeme Agiomor by technical superiority in the men’s 86kg #wrestling ????????#Tokyo2020 #StrongerTogether #UnitedByEmotion
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 4, 2021
2001-ல் ரமேஷ் குமார் மற்றும் பல்வீந்தர் சிங் ஆகியோர் ஜுனியர் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றிருந்தனர்.அதன்பிறகு,18 வருடங்கள் கழித்து ஜுனியர் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு தீபக் தங்கம் வென்று கொடுத்து பெருமை சேர்த்தார்.இதனால்,தற்போது ஒலிம்பிக்கிலும் அவர் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.