TOKYO2020:ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்ற இந்திய ஹாக்கி அணி..!
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முதல் நடைபெற்று வருகின்றன.மேலும்,ஹாக்கி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஸ்பெயின், அர்ஜென்டினா ஆகிய நாடுகள் ‘ஏ பிரிவில்’ இடம் பெற்றுள்ளன.
இந்தியா vs நியூசிலாந்து:
அதன்படி,நேற்று காலை நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. போட்டி தொடங்கிய 6-வது நிமிடத்திலேயே நியூசிலாந்து தனது முதல் கோலை அடித்து இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இதனையடுத்து,10-வது நிமிடத்தில் இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் இந்திய அணி சார்பாக முதல் கோல் அடித்து,1-1 என கணக்கில் ஆட்டத்தை சமன் செய்தார்.இதனைத் தொடர்ந்து,கேப்டன் மன்பிரீத் சிங் 26 மற்றும் 33 வது நிமிடங்களில் தொடர்ச்சியான பெனால்டி கார்னர்களை அடித்தார்.
இதற்கிடையில்,நியூசிலாந்து 27-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. இதனால் 3-வது காலிறுதி ஆட்டம் முடிவில் இந்தியா 3-2 என முன்னிலை பெற்றது.4-வது காலிறுதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத காரணத்தினால் இந்தியா 3-2 என கணக்கில் வெற்றி பெற்றது. இதனால்,டோக்கியோவில் இந்த முறை இந்தியர்கள் ஒரு பிரகாசமான பதக்கத்தை வெல்வார்கள் என்ற நம்பிக்கை எழுந்தது.
இந்தியா vs ஆஸ்திரேலியா :
இந்நிலையில்,இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாம் நாள் லீக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி களமிறங்கியது.முதல் ரவுண்டில் டேனியல் பீல் அடித்ததால் ஆஸ்திரேலியா முன்னிலை பெற முடிந்தது.ஆனால்,கேப்டன் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி கோல் ஏதும் அடிக்கவில்லை.இதனால், எனவே ஆஸ்திரேலியா 1-0 என கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து, இந்தியா சார்பில் தில்பிரீத் சிங் ஒரு கோல் மட்டுமே அடித்தார்.ஆனால்,டிம் பிராண்ட், ஜோசுவா பெல்ட்ஸ், ஃப்ளின் ஆண்ட்ரூ ஓகில்வி, ஜெர்மி தாமஸ் ஹேவர்ட் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு தலா ஒரு கோல் அடித்தனர்.இதனால்,1-7 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய ஹாக்கி அணி வெற்றி பெற்றது.
Not a great day at work for the #MenInBlue, but this will pump us to come back a lot stronger! ????#INDvAUS #HaiTayyar #IndiaKaGame #TokyoTogether #StrongerTogether #Tokyo2020 #HockeyInvites #TeamIndia #Hockey pic.twitter.com/xdnJpUvivu
— Hockey India (@TheHockeyIndia) July 25, 2021