TOKYO2020:குத்துச்சண்டை போட்டியில் ஆஷிஷ் குமார் தோல்வி…!
டோக்கியோ ஒலிம்பிக்கின் குத்துச்சண்டை போட்டியில் 75 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தோல்வியடைந்து ஏமாற்றமளித்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.
அதன்படி,இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் குத்துச்சண்டை மிடில்வெயிட் (69-75 கிலோ) சுற்றின் ரவுண்டு 32 போட்டியில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார்,சீனாவின் எர்பீக் டுஹெட்டாவை எதிர்கொண்டார்.
ஆரம்பத்தில் இருவருமே கடுமையாக போராடினர். இறுதியில்,ஆஷிஷ் குமார் 0-5 என்ற கணக்கில் டுஹெட்டாவிடம் தோல்வியடைந்தார். இதனால்,குத்துச்சண்டையில் 75 கிலோ எடை பிரிவில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பை ஏமாற்றமாகியது.
Chin up, champ! ????#IND‘s men’s 75kg boxing middleweight, Ashish Kumar, suffered a first round defeat to #CHN‘s Erbieke Tuoheta by unanimous decision! #Olympics | #StrongerTogether | #UnitedByEmotion | @OLyAshish
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 26, 2021
பதக்க வாய்ப்பு:
முன்னதாக,டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துசண்டை போட்டியில் இந்தியாவின் மேரிகோம் 51 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் டொமினிகாவின் மிக்குவேலினாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
முதல் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மேரிகோம் தகுதி பெற்றுள்ளார். இதனால்,இந்தியாவில் இருந்து முழு குத்துச்சண்டை அணியிலும் 1 வது சுற்று வெற்றியை பதிவு செய்தவர் மேரிகோம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கண்டிப்பாக அவர் ஒரு பதக்கத்தை பெறுவார் என்று எதிபார்க்கப்படுகிறது.