பாராலிம்பிக்:அவனி லெகாராவால் மீண்டும் ஒலித்த இந்திய தேசிய கீதம் – நீரஜ் சோப்ரா வாழ்த்து…!
அவனி லெகாரா தங்கம் வென்றதன் காரணமாக பாராலிம்பிக் பதக்க நிகழ்வில் இந்தியாவின் தேசிய கொடி ஏற்றப்பட்டு,தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா இரண்டு வெள்ளி,ஒரு வெண்கலம் வென்றது.
இதனையடுத்து,இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனைப் படைத்துள்ளார். ஏனெனில்,பாராலிம்பிக் வரலாற்றில் இந்திய வீராங்கனை ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை.மேலும்,அவினி லெகாரா தங்கம் வென்றதன் காரணமாக பாராலிம்பிக் பதக்க நிகழ்வில் இந்தியாவின் தேசிய கொடி ஏற்றப்பட்டு,தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
#IND‘s national anthem echoes across the arena as Avani Lekhara grabs a historic #Gold for her nation! ????#Tokyo2020 #Paralympics #ShootingParaSport @AvaniLekharapic.twitter.com/Agv5Wptrfi
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 30, 2021
இதற்கு முன்னதாக நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றபோது,ஒலிம்பிக் மேடையில் இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு,தேசிய கீதமும் இயற்றப்பட்டது.இந்த நிலையில்,பாராலிம்பிக்கில் இந்தியாவின் அவனி தங்கம் வென்றதன் மூலம் இன்று மீண்டும் டோக்கியோவில் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு,நாட்டிற்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,பாராலிம்பிக்கில் தேசிய கீதம் இயற்றப்பட்டதற்கு அவனி லெகாராவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ரா கூறியதாவது:”உங்கள் முதல் பாராலிம்பிக்ஸ் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்கு மற்றும் டோக்கியோவில் அற்புதமான நிகழ்ச்சியில் மீண்டும் தேசிய கீதத்தைக் கேட்க எங்களுக்கு வாய்ப்பளித்ததற்காக வாழ்த்துக்கள்”, என்று தெரிவித்துள்ளார்.
Congratulations @AvaniLekhara on such an amazing performance at your first #Paralympics and for giving us the opportunity to listen to the national anthem again in Tokyo! ???????? https://t.co/RwGqs7fPNI
— Neeraj Chopra (@Neeraj_chopra1) August 30, 2021
டோக்கியோ பாராலிம்பிக்கில்,இன்று வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா வெள்ளிப்பதக்கமும் ,ஆண்கள் ஈட்டி எறிதல் எஃப் 46 இறுதிப் போட்டியில்,தேவேந்திர ஜஜாரியா வெள்ளியும்,சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலமும் வென்று சாதனை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.