டோக்கியோ ஒலிம்பிக்:மனிகா பத்ரா வெற்றி…!
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இரண்டாம் சுற்றில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா,வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்றில் உக்ரேனின் மார்கரிட்டா பெசோட்ஸ்காவை,இந்திய வீராங்கனை மனிகா பத்ரா எதிர்கொண்டார்.முதலில் இரண்டு ஆட்டங்களில் சரிவை சந்தித்த நிலையில்,பின்னர்,மூன்றாவது ஆட்டத்தை 11-7 என்ற கணக்கில் வென்றார்.இதனையடுத்து ,நான்காவது ஆட்டத்தில் ஒரு புள்ளியை பெற தவறி மீண்டும் தோல்வியை தழுவிய நிலையில்,ஏழாவது ஆட்டத்தில் மார்கரிட்டாவை வீழ்த்தி,இறுதியில் 4-3 (4-11, 4-11, 11-7, 12-11, 8-11, 11-5, 11-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.இதனால்,அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
Now that’s a comeback!! ????
Indian paddler @manikabatra_TT stuns higher ranked Margaryta Pesotska 4-3 (4-11, 4-11, 11-7, 12-10, 8-11, 11-5, 11-7) to advance further in women’s singles!#Olympics | #StrongerTogether | #UnitedByEmotion
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 25, 2021
முன்னதாக,சனிக்கிழமையன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் கிரேட் பிரிட்டனின் டின்-டின் ஹோவை எதிர்த்து 4-0 (11-7, 11-6, 12-10, 11-9) என்ற செட் கணக்கில் வீழ்த்தி 26 வயதான மனிகா பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
.@manikabatra_TT powers to a 4-0 win over Tin-Tin Ho of #GBR in the women’s singles #TableTennis event ????????
Final score ???? 11-7,11-6,12-10,11-9 #IND#BestOfTokyo | #Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion pic.twitter.com/81wrCz3H2J
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 24, 2021