டோக்கியோ ஒலிம்பிக்:ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை..!
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் முன்னதாக நடைபெற்ற ஆண்கள் ஈட்டி எறிதல் தகுதி சுற்றுப் போட்டியில்,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். ஏனெனில், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற 83.50 மீ ஈட்டி எறிந்தால் போதும்,ஆனால் ,நீரஜ் தனது முதல் முயற்சியிலேயே 86.65 மீட்டர் தூரத்தில் ஈட்டியை எறிந்து குரூப் ஏ பிரிவில் இரண்டாம் பிடித்து சாதனைப் புரிந்தார்.
அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்பது இதுவே முதல் முறை,மேலும்,இவர் ஒலிம்பிக்கில் பங்கு கொள்வதற்காக ஸ்வீடனில் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார்.அதன்படி,தனது சிறப்பான முயற்சியின் மூலம் நீரஜ் சோப்ரா,இறுதி போட்டிக்கு முன்னேறி இந்தியாவுக்கு பதக்கத்தைப் பெற்று கொடுக்கும் வாய்ப்பை தக்க வைத்தார்.
சாதனை:
இந்நிலையில்,இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய இறுதிப்போட்டியில்,மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்ற இப்போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.தொடக்கத்தில் முதல் சுற்றில் 87.03 மீ தூரமும்,இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்தார்.
Neeraj Chopra’s first throw – 87.03m ????
WHATTA START! ????#StrongerTogether | #UnitedByEmotion | #Olympics | #Tokyo2020 | #Athletics @Neeraj_chopra1
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 7, 2021
Neeraj Chopra is only getting better with each throw! ????
Second attempt – 87.58m #Tokyo2020 | #UnitedByEmotion | #StrongerTogether | #Athletics | #Olympics | @Neeraj_chopra1
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 7, 2021
இப்போட்டியின் மூன்றாவது சுற்றில் 76.79 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்தார்,இவர் இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்ததால் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார்.தொடர்ந்து மூன்றாவது மற்றும் நான்காவது சுற்று முடிவிலும் முன்னிலையில் இருந்தார் நீரஜ். இதை எந்த நாட்டு வீரரும் முறியடிக்கவில்லை. இந்நிலையில் கடைசி சுற்றிலும் முன்னிலை வகித்தால் அவர் தங்க பதக்கத்தை வென்றுள்ளார். இதனால்,ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை இன்று வென்றுள்ளது.
Javelin thrower Neeraj Chopra wins the first #Gold medal for India at #Tokyo2020; throw 87.58 meters in first attempt pic.twitter.com/gsbwb5xIBy
— ANI (@ANI) August 7, 2021
இவர் தங்கம் வென்றதால் பதக்க பட்டியலில் 66 வது இடத்தில் இருந்த இந்தியா 46 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியா இதுவரை 2 வெள்ளி,3 வெண்கலம் பெற்றிருந்த நிலையில்,இன்று மல்யுத்தம் போட்டியில் பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கத்தை பெற்றார்.தற்போது,நீரஜ் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனால்,மொத்தமாக இதுவரை இந்தியா 7 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
நீரஜ் சோப்ரா வென்ற தங்கம்:
21 வயது ஆகும் நீரஜ் ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர்.மேலும்,இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
நீரஜ் 2016 உலக U-20 சாம்பியன்ஷிப் போட்டிகளில் 86.48 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்தார். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கான தொடக்க விழாவில் சோப்ரா கொடியைத் தாங்கியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பின்னர்,ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் ஈட்டி எறிதலில் 88.06 மீ தூரத்திற்கு எறிந்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இவர் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தகுதி போட்டியில் 87.86 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.