டோக்கியோ ஒலிம்பிக்: நீரஜ் சோப்ரா முன்னிலை.,, இந்தியாவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு..!
ஈட்டியை எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா 87.58 மீ ஈட்டி எறிந்து முன்னிலையில் உள்ளார்.
இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய ஈட்டியை எறிதல் இறுதிப்போட்டியில், நீரஜ் சோப்ரா பங்கேற்றார். முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்தார். இப்போட்டியின் மூன்றாவது சுற்றில் 76.79 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இதனால் இந்தியாவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா 87.03 மீ தூரத்தை இன்னும் எந்த வீரரும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.