இந்திய வீராங்கனை பி.வி.சிந்து உலக பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்றார். அதன் பின்னர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று டெல்லியில் பி.வி சிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது, அதற்கு அனைத்திற்கும் பதில் அளித்தார்.அப்போது பேசிய பி.வி சிந்து உலக சாம்பியன் பட்டம் வென்றது எனது பேட்மிட்டன் பயணத்தில் சிறப்பு வாய்ந்ததாகும்.
பின்னர் விளையாடிய அடுத்தடுத்த போட்டிகளில் முதல் சுற்றிலேயே வெளியேறினேன். ஆனாலும் மனம் தளரவில்லை. நேர்மறை எண்ணத்துடனேயே செயல்பட்டேன்.அனைத்துப் போட்டிகளும் தொடர்ந்து வெற்றிகளை ஒருவரால் பதிவு செய்ய முடியாது. சில போட்டிகளில் புத்திசாலிதனமாக விளையாடலாம்.
சில போட்டிகளில் தவறாக விளையாடலாம் என கூறினார். விளையாட்டில் நான் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வருகிறேன். நான் அனைத்து போட்டிகளில் வெல்ல வேண்டும் என எதிர்பார்ப்பு இருக்கின்றன. இது நிறைவேறாத பட்சத்தில் எனக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அந்த விமர்சனங்களும், எதிர்பார்ப்புகளும் என்னை பாதிக்காது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன்.இதற்காக பல்வேறு உத்திகளுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். நிச்சயமாக ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வேன் என கூறினார்.
இந்திய வீராங்கனை பி.வி.சிந்து உலக பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற பிறகு 7 போட்டிகளில் வரிசையாக தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…