டோக்கியோ ஒலிம்பிக்:துப்பாக்கிச் சுடுதல் 25 மீட்டர் தகுதிச் சுற்றில் மனு பாக்கர் 5 ஆவது இடம்..!

Default Image

டோக்கியோ ஒலிம்பிக்: பெண்கள் 25 மீ பிஸ்டல் தகுதி சுற்றில் மனு பாக்கர் 5 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் 25 மீட்டர் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ரெபிட் மற்றும் துல்லியம் (பிரிசிஷன்) என்ற இரண்டு தகுதிச் சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் மனு பாக்கர் மற்றும் ராஹி சர்னோபட் ஆகியோர் பங்கேற்றனர்.

ராஹி சர்னோபட்:

முதலில் இந்தியாவின் ராஹி சர்னோபட் பங்கேற்றார்.அதில் முதல் சீரிஸில் மொத்தமாக 96 புள்ளிகள் பெற்றார். அதன்பின்னர் இரண்டாவது சீரிஸில் 97 புள்ளிகள் மற்றும் கடைசி சீரிஸில் 94 புள்ளிகளை பெற்றார். இதனால், மொத்தமாக பிரிசிஷன் தகுதிச் சுற்றில் ராஹி சர்னோபட்  287 புள்ளிகள் எடுத்து 25 வது இடத்தை பெற்றார்.

மனு பாக்கர்:

இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய இந்தியாவின் மனு பாக்கர் முதல் சீரிஸில் 97 புள்ளிகளும்,இரண்டாவது சீரிஸில் 97  புள்ளிகளும் எடுத்தார். இதனையடுத்து,கடைசி சீரிஸில் மனு பாக்கர் 98 புள்ளிகள் எடுத்தார்.இதனால்,பிரிசிஷன் தகுதிச் சுற்றில் மனு பாக்கர் மொத்தம் 292 புள்ளிகள் எடுத்து,5 வது இடத்திலும் உள்ளார்.

ஆனால்,செர்பியாவின் ஜோரோனா அருனோவிக் 296 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும்,கிரீஸ் நாட்டின் கோரகக்கி 294 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

ரெபிட் தகுதிச் சுற்று:

மேலும்,25 மீட்டர் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில்,ரெபிட் தகுதிச் சுற்று நாளை  நடைபெறும். இந்த இரண்டிலும் எடுக்கும் புள்ளிகளை வைத்து முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்.

மனு பாக்கர் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் பங்குகொண்டார். மொத்தம் ஆறு சுற்றுகளாக நடக்கும் தகுதி ஆட்டத்தில் முதல் சுற்றில் 100-க்கு 98 புள்ளிகள் பெற்று முன்னிலையிலிருந்தார் மனு பாக்கர்.

துப்பாக்கி கோளாறு:

இவ்வாறு,வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த மனு பாக்கரின் ஸ்கோர் இரண்டாம் சுற்றின் நடுவே 160-க்கு 154 புள்ளிகள் பெற்ற நிலையில்,அவரது துப்பாக்கியில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த இடைவெளியில் வேறு வழி இல்லாமல் மீண்டும் சோதனை தளத்திற்குச் சென்று பயிற்சியாளருடன் தனது துப்பாக்கியைச் சரிசெய்தார்.

தோல்வி:

ஆனால், அதற்குள் முதலில் ஆட்ட நேரமான 75 நிமிடங்களில் சுமார் 20 நிமிடங்களை இழந்தார்.மேலும்,36 நிமிடங்களில் 44 ஷாட்கள் சுட வேண்டிய இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டார்.அதிலும் எடுத்துவந்த துப்பாக்கியைச் சோதனை செய்யவே அவருக்கு 4-5 நிமிடங்கள் ஆனது.இறுதியில்,கடைசி 34 நிமிடங்களில் 575 புள்ளிகள் பெற்று வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியை சந்தித்தார்.ஏனெனில்,577 புள்ளிகள் எடுத்திருந்தால் அவர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கலாம் .இதனால்,இப்போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்