டோக்கியோ ஒலிம்பிக்:வில்வித்தை காலிறுதியில் தோல்வியை தழுவிய இந்தியா..!
டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆண்கள் வில்வித்தை காலிறுதி போட்டியில் கொரிய அணியிடம்,இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்கள் வில்வித்தை போட்டியில் 16 அணிகள் கொண்ட சுற்றில் இந்தியாவின் அதானு தாஸ், பிரவீன் ஜாதவ் மற்றும் தருந்தீப் ராய் ஆகியோர் கொண்ட அணி, கஜகஸ்தானை எதிர்கொண்டனர்.இதில் வெற்றிபெறும் அணியானது எட்டு அணிகள் கொண்ட காலிறுதி சுற்றுக்கு முன்னேறுவர்.
காலிறுதிக்கு முன்னேற்றம்:
போட்டியின் முதல் பாதியில் இந்திய அணி 55 புள்ளிகள் பெற்ற நிலையில், கஜகஸ்தான் அணி 54 புள்ளிகள் பெற்றது.இதனால் முதல் சுற்றிலேயே இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.பின்னர்,இரண்டாவது சுற்றிலும் இந்தியா 52-50 என்ற கணக்கில் புள்ளிகளை பெற்றதால், மொத்தமாக 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து,கஜகஸ்தான் அணி மூன்றாவது சுற்றில் 57 புள்ளிகள் பெற்ற நிலையில், இந்தியா 56 புள்ளிகள் மட்டுமே பெற்றது.இதன்பின் நான்காவது சுற்று வரை நீண்ட ஆட்டத்தில் இந்தியா கடைசி சுற்றல் 55-54 எடுத்தது.
Indian men’s recurve archery team of Atanu Das, Pravin Jadhav, and Tarundeep Rai advance to quarterfinals after 6-2 win over Kazakhstan. They will play South Korea at 10:15 AM#Cheer4India #Tokyo2020 pic.twitter.com/RjwsM6smaK
— SAIMedia (@Media_SAI) July 26, 2021
இறுதியில்,6-2 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி இந்தியா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
கொரியா vs இந்தியா :தோல்வி
தற்போது காலிறுதியில் இந்திய அணியினர்,தென் கொரியா கிம் ஜே தியோக், கிம் வூஜின் மற்றும் ஓ ஜின்ஹைக் ஆகியோர் கொண்ட அணியை எதிர்கொண்டனர்.முதல் பாதியில் 10-10-9 என்ற கணக்கில் இருந்த கொரிய அணிக்கு, இந்தியா 8-10-10 என்ற கணக்கில் பதிலளித்தது.பின்னர் கொரியா 10-10-10 என்ற கணக்கில் 2 புள்ளிகளைக் கைப்பற்றியது.
இரண்டாவது பாதியில், 9-10-10 மற்றும் 10-10 என்ற கணக்கில் தொடங்கியதால் இந்தியா சிறப்பாக பதிலளித்தது,ஆனால் கடைசி அம்புக்குறியில் அதானு தாஸிடமிருந்து 8 மதிப்புகள் மட்டுமே கிடைத்தால்,கொரிய அணி மேலும் 2 புள்ளிகளை பெற்றது. இறுதியில், கொரிய அணியினர் 6 – 0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளனர்.இதனையடுத்து,கொரிய அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறி ஜப்பான் அணியை எதிர்கொள்ளவுள்ளனர்.
Korea will take on Japan in the first men’s team semifinal at the @Olympics. Now to decide the line-up in the second.#ArcheryatTokyo #archery pic.twitter.com/gTnwE0HpQV
— World Archery (@worldarchery) July 26, 2021