டோக்கியோ ஒலிம்பிக்: வில்வித்தையில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேற்றம்….!
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் போட்டியில்,காலிறுதியின் முந்தைய சுற்றில் வெற்றி பெற்று இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் தனிநபர் வில்வித்தை ரீகர்வ் முதல் சுற்றில் தீபிகா குமாரி,பூடான் வீராங்கனை கர்மாவை எதிர்கொண்டார்.இறுதியில்,மிக எளிதாக 6-0 என்ற கணக்கில் கர்மாவை வீழ்த்தி தீபிகா வெற்றியடைந்தார்.
காலிறுதியின் முந்தைய சுற்று :
மேலும்,இரண்டாவது சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஜெனிபருடன் கலந்து கொண்டார்.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-4 (25-26, 28-25, 27-25, 24-25, 26-25) என்ற கணக்கில் ஜெனிபரை வீழ்த்தி தீபிகா காலிறுதியின் முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.
உலகின் நம்பர் 1 வீராங்கனை:
இந்நிலையில்,இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் காலிறுதியின் முந்தைய சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையுமான தீபிகா குமாரி,தரவரிசையில் 8 வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீராங்கனை செனியா பெரோவாவை எதிர்கொண்டார்.
முதல் செட்:
இப்போட்டியில்,தீபிகாவுக்கு இணையாக ரஷ்ய வீராங்கனை பெரோவா திறமையை வெளிப்படுத்தினார்.இருப்பினும், முதல் செட்டை 28-25 என்ற புள்ளி கணக்கில் தீபிகா முன்னிலை வகித்தார்.
விறுவிறுப்பான போட்டி:
பின்னர்,இரண்டாவது செட்டை 26-27 என்ற புள்ளி கணக்கில் ரஷ்யாவின் பெரோவா கைப்பற்றினார்.ஆனால்,மூன்றாவது செட்டை 28-27 என்ற புள்ளி கணக்கில் தீபிகா கைப்பற்றினார். இந்த நிலையில் நான்காவது செட்டில் 26-26 என்ற புள்ளி கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்தனர்.
இதனால்,வெற்றியை கடைபிடிக்க சூட் ஆஃப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில்,பெரோவா 7 புள்ளிகள் மட்டுமே பெற்றார். ஆனால்,தீபிகா 10 புள்ளிகள் பெற்றார்.இதனால் 6-5 என்ற கணக்கில் பெரோவாவை வீழ்த்தி, தீபிகா வெற்றி பெற்றார்.இதனால்,காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
#TeamIndia | #Tokyo2020 | #Archery
Women’s Individual 1/8 Eliminations ResultsArcher @ImDeepikaK moves past Ksenia Perova to progress into the QFs. A hard fought shoot-off decided the result. #WayToGo champ! ????????????#RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/fVrtgKffUR
— Team India (@WeAreTeamIndia) July 30, 2021
நேற்று அவரது கணவர் அதானு தாஸ்,வில்வித்தை தனிநபர் காலிறுதியின் முந்தைய சுற்றில் கொரிய குடியரசின் ஜின்-ஹைக் ஓவை, 6-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.