டோக்கியோ ஒலிம்பிக்: பஜ்ரங் புனியா வெற்றி.., இந்தியாவுக்கு 6-வது பதக்கம் ..!
வெண்கலத்துக்கான போட்டியில் கஜகஸ்தான் வீரரை பஜ்ரங் புனியா 8-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்தியா வீரர் பஜ்ரங் புனியா ஆடவா் மல்யுத்தம் 65 கிலோ பிரிவில் நேற்று களம் கண்டாா்.காலிறுதிச் சுற்றில் ஈரான் வீரா் மோர்டஸாவை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். பஜ்ரங் புனியா, அஜர்பைஜான் வீரர் அலியோ ஹஜியுடன் மோதினார். அரையிறுதிப் போட்டியில் அலியோ ஹஜியிடம் பஜ்ரங் புனியா 12-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
அரையிறுதி போட்டியில் தோற்றதால் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இன்று பஜ்ரங் புனியா மோதினார். வெண்கலத்துக்கான போட்டியில் கஜகஸ்தான் வீரா் நியாஸ்பெகோவை புனியா எதிர்கொண்டார். இப்போட்டியில் பஜ்ரங் புனியா 8-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால், இந்தியாவிற்கு 6-வது பதக்கம் உறுதியானது.
நடப்பு ஒலிம்பிக்கில் மொத்தம் ஆறு பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. அதில் நான்கு வெண்கலபதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கம் ஆகும்.
It’s OFFICIAL! Bajrang Punia is now an Olympic #bronze medallist! ????
The #IND grappler defeated Daulet Niyazbekov of #KAZ by 8-0, to win India’s 6th medal at #Tokyo2020!#UnitedByEmotion | #StrongerTogether | #Wrestling
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 7, 2021