டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020:காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதானு தாஸ்,அமித் பங்கல் தோல்வி ..!

Default Image

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்கள் தனிநபர் காலிறுதியின் முந்தைய சுற்றில் வில்வித்தை போட்டியில் அதானு தாஸும்,குத்துச்சண்டையில் அமித் பங்கலும் தோல்வியடைந்துள்ளார்கள்.

டோக்கியோவில் கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் பிரிவில்,முதலில் 1/32 எலிமினேஷன் போட்டியில் சீன தைபேயின் யூ-செங் டெங்கை 6-4 என்ற கணக்கில் அதானு தாஸ் வெற்றி பெற்றார்.

தொடர் வெற்றி:

இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற வில்வித்தை தனிநபர் 1/16 எலிமினேஷன் போட்டியில் கொரிய குடியரசின் ஜின்-ஹைக் ஓவை வீழ்த்தி 6-5 என்ற செட் கணக்கில் அதானு தாஸ் வெற்றி பெற்று,காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

ஆதிக்கம்:

இந்நிலையில்,இன்று நடைபெற்ற காலிறுதியின் முந்தைய சுற்றில் ,அதானு தாஸ் ஜப்பானின் தகாஹரு ஃபுருகாவாவை எதிர்கொண்டார்.போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஃபுருகாவா முதல் செட்டில் 2-0 என்ற கணக்கில் அதானுவை வீழ்த்தி முன்னிலை பெற்றார்.

விறுவிறுப்பான போட்டி:

ஆனால்,இரண்டாவது செட்டில்,இரண்டு பெரும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர்.இதனையடுத்து,அதானு தனது திறமையால் மூன்றாவது செட்டை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகித்தார். பின்னர்,நான்காவது செட்டில் இரண்டு பெரும் மீண்டும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர்.

முற்றுப்புள்ளி:

கடைசி செட்டில்,மீண்டும் ஃபுருகாவா 2-0 என்ற கணக்கில் அதானுவை வீழ்த்தி முன்னிலை பெற்றார்.இவ்வாறு,மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 6-4 என்ற புள்ளி கணக்கில் அதானு தாஸை வீழ்த்தி, ஃபுருகாவா வெற்றி பெற்றார்.இதனால்,வில்வித்தை ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க கனவுக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

குத்துச்சண்டை:

அதேபோல,இன்று நடைபெற்ற ஆண்கள் 52 கிலோ எடை பிரிவுக்கான குத்துச்சண்டையில் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அமித் பங்கல்,கொலம்பியாவின் மார்டினஸ் உடன் மோதினார்.இதில் அமித் பங்கலை 4-1(28-29,29-27,30-27,29-28,29-28) என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து மார்டினஸ் வென்றார்.

கடந்த ரியோ ஒலிம்பிக்கில் மார்டினஸ் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால்,அமித் பங்கலின் தற்போதைய ஒலிம்பிக் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்