டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு புதிய தேதி அறிவிப்பு.!
ஜப்பான் டோக்கியோவில் ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திட்டமிட்டு இருந்தது. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதால் ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கடந்த நாட்களுக்கு முன்பு ஒலிம்பிக் போட்டியை ஒரு வருடத்திற்கு பிறகு தள்ளி வைப்பதாக அதிகாரபூர்வமாக கூறியது. இதற்கு மறு தேதி ஏதும் குறிப்பிடப்படவில்லை.
The #Tokyo2020 Paralympic Games will be held from 24 August until 5 September 2021. pic.twitter.com/VIecByJdJD
— #Tokyo2020 (@Tokyo2020) March 30, 2020
இந்நிலையில், தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 2021ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி துவங்கவுள்ளதாக ஒலிம்பிக்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. பாரா ஒலிம்பிக் போட்டிகள் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனிடையே ஒலிம்பிக் போட்டிகள் 1896 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றின் மூன்று முறை மட்டுமே ரத்தாகி உள்ளது. உலகப் போர்கள் காரணமாக 1916 ஆம் ஆண்டு பெர்லின் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியும் , 1940-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டியும் 1944 -ல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியும் ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.