கனவை நிஜமாக்கிய டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா!

Default Image

ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தனது பெற்றோர்களை விமானத்தில் அழைத்து சென்று கனவை நிஜமாக்கினார்.

நடந்து உடைந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய வரலாறு சாதனை படைத்திருந்தார். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். நீரஜ் தங்க பதக்கம் வென்ற தினத்தை (ஆகஸ்டு 7) தேசிய ஈட்டி எறிதல் தினமாக இந்திய தடகள சம்மேளனம் அறிவித்து உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்ற ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நீரஜ் சோப்ராவுக்கு நாடு முழுவதும் பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து உள்ளன. இந்த நிலையில், நீரஜ் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், எனது பெற்றோர்களை முதன் முறையாக விமானத்தில் அழைத்துச் செல்ல முடிந்ததால் என்னுடைய ஒரு சிறிய கனவு இன்று நனவாகியது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்