மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று கோலாகலமாக தொடங்கியது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்று திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கி உள்ளது. இன்று தொடங்கி உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 5 வரை நடைபெறுகிறது.
இதனிடையே, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் ஒரு தங்கம் 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என இந்தியா 7 பதக்கங்களை வென்றது என்பது அனைவரும் அறிந்தது.
இந்த நிலையில், 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில், இந்தியா சார்பில், இதுவரை இல்லாத அளவுக்கு தடகளம், வில்வித்தை, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட ஒன்பது வகையான விளையாட்டுகளில், 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
பாரா ஒலிம்பிக் தொடக்க விழாவில், 5 வீரர்கள் மற்றும் 6 அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்றும், 2016 பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டியிருந்தது.
164 நாடுகளை சேர்ந்த 4500 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று ஜப்பானில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் டோக்கியோ ஒலிம்பிக் போல் பாரா ஒலிம்பிக்கிலும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.
மேலும், பாரா ஒலிம்பிக் போட்டியில் தகுதிச்சுற்றுகள் ஆகஸ்ட் 25, 26 மற்றும் 27-ஆம் தேதிகளிலும், காலிறுதி மற்றும் இறுதிப்போட்டி முறையே ஆகஸ்ட் 28 மற்றும் 29 தேதிகளிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்த்து இருந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் மாரியப்பன் தொடர்பில் இருந்ததால், மாரியப்பனுக்கு பதிலாக ஈட்டி எறிதல் வீரர் தேக்சந்த் தேசிய கொடி ஏந்தி சென்றார். மாரியப்பன் உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…