டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் 75 கிலோ பிரிவில் அல்ஜீரியாவின் இக்ராக் சாய்பை வீழ்த்தி இந்திய வீராங்கனை பூஜா ராணி வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் 69-75 கிலோ எடை கொண்ட மிடில்வெயிட் குத்துச்சண்டை போட்டியின் 16 வது சுற்றில் அல்ஜீரியாவின் இக்ராக் சாய்பை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி,இந்திய வீராங்கனை பூஜா ராணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இதன்மூலம்,ஆசிய சாம்பியனும், ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய தடகள வீரருமான பூஜா ராணி,இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்வதை நோக்கி ஒரு படி மேலே சென்றுள்ளார்.
பூஜா ராணி:
முன்னதாக,2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 75 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.2016 இல் தெற்கு ஆசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.அவர் மே 2016 இல் நடந்த பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது சுற்றில் தோற்றபோது ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறத் தவறிவிட்டார்.
இருப்பினும், ஆசிய-ஓசியானியா ஒலி தகுதிச் சுற்றில் பெண்கள் 75 கிலோ எடை கொண்ட காலிறுதியில் போர்னிபா சுட்டீயை 5-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம் 2020 ஒலிம்பிக்கிற்கும் தகுதிபெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…