இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வெஸ்ட் இண்டீஸ் விளையாடிய டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகின்றனர்.
இந்நிலையில் இன்று முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் மைதானத்தில் நடைபெற உள்ளது.இன்றைய போட்டி பிற்பகல் 01.30 மணிக்கு தொடங்கி பகல் -இரவு போட்டியாக நடைபெறுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை கோலி ,கே.எல் ராகுல் மற்றும் ரோகித் ஆகியோர் டி20 தொடரில் சிறப்பாக விளையாடினர்.
மூன்று பேரும் நல்ல பார்மில் இருப்பதால் ஒரு நாள் தொடரிலும் அதிக ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷாப் பண்ட் பேட்டிங் , விக்கெட் கீப்பிங் சரியாக விளையாடாமல் இருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு என்பதில் சந்தேகமில்லை.காயமடைந்த தவானுக்கு பதில் மயங்க் அகர்வாலும் , புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு இன்றைய போட்டியில் களம் காண உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ஷாய் ஹோப், அதிரடியாக விளையாடி வருகின்றனர். பந்து வீச்சில் சிறப்பாக வீசுகின்றனர்.வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் நேற்று செய்தியாளர் சந்திப்பில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை எப்படி அணுக வேண்டும் என்ற தெளிவானதிட்டத்துடன் வந்து உள்ளோம்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றோம். தற்போது சிறந்த அணியான இந்தியா அணிஉடன் விளையாட இருக்கிறோம். சில விஷயங்களில் நாங்கள் மாற்றம் செய்யவேண்டும். ஒரே நாள் இரவில் வெற்றி வந்து விடாது. கடினமாக உழைக்க தயாராக உள்ளோம். ஆப்கானிஸ்தான் தொடரில் கிடைத்த வெற்றியை இந்த தொடரிலும் பெற விரும்புகிறோம் என கூறினார்.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…