இன்று சின்ன தல ரெய்னாவின் பிறந்தநாள் ..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சுரேஷ் ரெய்னா உத்தரப் பிரதேசதில் ராஜ்நகரில் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் ரைனா, நரேஷ் ரைனா, முகேஷ் ரைனா ஆகிய மூன்று மூத்த சகோதரர்களும், ரேனு எனும் மூத்த சகோதரியும் உள்ளனர். இவர் இடது கை வீரர், அவ்வப்போது சுழல் பந்து வீசும் வல்லமை படைத்தவர்.
நவம்பர் 27-1986-ம் ஆண்டில் பிறந்த சுரேஷ் ரைனாவுக்கு இன்று 33-வது பிறந்தாளாகும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காசுமீர் பண்டிட்கள் வாழ்ந்திருந்த ரைனாவாரி சிறுநகரைச் சேர்ந்தவர்.
பின்னர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக காசிபாத்தில் இருந்து இலக்னோ 2000-ஆம் ஆண்டில் சென்றார். அங்குள்ள குரு கோவிந்த் சிங் விளையாட்டுக் கல்லூரியில் சேர்ந்தார். பின் உத்தரப் பிரதேசம் அணியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கைச் சுற்றுப் பயணத்திற்கு பதினைந்தரை வயதில் தேர்வானார். 2003-ம் ஆண்டில் ரஞ்சிக் கோப்பையில் அசாம் அணிக்கு எதிரான போட்டியில் உத்தரப் பிரதேசம் அணிக்காக விளையாடி உள்ளார்.
ஜூலை 2005 முதல் இந்தியத் அணியில் ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடி வந்தார். பின்னர் 2006-ம் ஆண்டிலேயே அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரது முதல் ஆட்டம் ஜூலை 26, 2010-ல் இலங்கைக்கு எதிராக விளையாடினார்.
இவரின் முதல் ஒருநாள் போட்டி பத்தொன்பதாவது வயதில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடினார். இவரின் முதல் போட்டியிலேயே நுறு ரன்கள் அடித்தார். 2011-ம் ஆண்டில் உலகக்கோப்பை வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.
சுரேஷ் ரைனா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் மூன்று ஆண்டுகள் விளையாடுவதற்காக ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டார். முதல் பருவத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்த ரெய்னா. அந்த ஆண்டில் மாத்தியூ எய்டன், மைக்கேல் ஹசி, மற்றும் ஜேக்கப் ஓரம் ஆகிய வீரர்களுடன் விளையாடினார்.
தோனி இல்லாத மூன்று போட்டிகளில் சென்னை சூப்பர்கிங்சின் அணித் தலைவராக இருந்து இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கோப்பை வென்ற போட்டியில் ஐம்பது ரன்கள் பெற்று அணியின் வெற்றிக்கு உதவினார்.
2011-ம் ஆண்டு IPL-லில், சுரேஷ் ரெய்னா 438 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார். அதே போல், தொடர்ந்து ஏழு தொடர்களில் 400 ரன்கள் மேல் எடுத்த ஒரே வீரர் ஆவார்.
சுரேஷ் ரெய்னா, இந்திய அணித் தலைவராகவும் இருந்துள்ளார். ஒருநாள் தொடர், டெஸ்ட் ஆட்டம், சர்வதேச டி20 போட்டி ஆகிய மூன்று வகையான போட்டிகளில் நூறு ரன்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் ஆவார்.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியை “தல தோனி” என ரசிகர்கள் அழைப்பார்கள்.தோனிக்கு பிறகு சென்னை அணியில் உள்ள சுரேஷ் ரெய்னாவை “சின்ன தல ரெய்னா ” என ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.