கோப்பை யாருக்கு.? ஆடியன்ஸ் இல்லாமல் நடைபெறவுள்ள ஐ.எஸ்.எல் கால்பந்து இறுதிப்போட்டி.!
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி கோவாவில் இன்று நடைபெறவுள்ளது. சாம்பியனை தீமானிக்கும் இறுதிப்போட்டியில் சென்னை – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை செய்கிறது. சீனாவில் தொடங்கி இந்தியாவிலும் கொரோனா பரவியுள்ளதால். இதன் விளைவு காரணமாக போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் 6வது சீசன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற இடத்தொடரில் ஆரம்பத்தில் தொடர் தோல்வியை சந்தித்த சென்னை அணி பயிற்சியாளரை மாற்றம் செய்த பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறி கொல்கத்தா அணியுடன் மோதுகிறது. இரு அணிகளுமே தலா 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. மேலும் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இரு அணிகளும் கோவாவில் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது.