கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு டிஎன்பிஎல் தொடர் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழகத்தை சார்ந்த 8 அணிகள் கலந்து கொண்டன. அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலியில் நடைபெற்றது. இறுதிப்போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
டிஎன்பிஎல் தொடர் முடிந்த பின் சில வீரர்கள், ஒரு பயிற்சியாளர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டு இருந்ததாக செய்திகள் வெளியானது.அதைத் தொடர்ந்து பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவை சேர்ந்த அஜித் சிங் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்தினர்.அதன் பின் எந்தவித செய்தியும் வெளியாகாத இருந்த நிலையில் கங்குலி சில நாட்கள் முன்பு டிஎன்பிஎல் தொடரில் இரு அணிகள் தடை செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது.
ஆனால், அது உண்மை இல்லை என தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் திண்டுக்கல்லில் தூத்துக்குடி மற்றும் மதுரை அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற போட்டியின் போது 225 கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த இரு அணிகளையும் தகுதி நீக்கம் செய்ய பிசிசிஐ உத்தரவு பிறப்பித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…