லியோனல் மெஸ்ஸி பயன்படுத்திய டிஸ்யூ பேப்பர்;1 மில்லியன் டாலருக்கு ஏலம் – காரணம் என்ன தெரியுமா?..!

Default Image

பார்சிலோனா அணியில் இருந்து விடைபெற்றபோது,லியோனல் மெஸ்ஸி பயன்படுத்திய டிஸ்யூ பேப்பர் 1 மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிதி மற்றும் கட்டமைப்பு பிரச்சினை காரணமாக பார்சிலோனா அணியில் இருந்து லியோனல் மெஸ்ஸி கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று விலகினார். 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக அவர் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்சிலோனா அணியில் இருந்து விடைப்பெறும் முன் செய்தியாளர்களை சந்தித்த மெஸ்ஸி, “இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை”,என்று கண்ணீர் மல்க பேசினார். இதனால், உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.அப்போது அவர் கண்ணீரை துடைக்க டிஸ்யூ பேப்பரை பயன்படுத்தினார்.

இதனையடுத்து,அவர் பயன்படுத்திய டிஸ்யூ பேப்பரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எடுத்துசென்று Meikeduo என்ற இணையதளத்தில்,அந்த டிஷ்யூ பேப்பரில் மெஸ்ஸியின் டி.என்.ஏ பதிவாகி உள்ளதால் அதை வைத்து க்ளோனிங் முறைப்படி மெஸ்ஸியின் திறமைகள் கொண்ட இன்னொருவரை உருவாக்க முடியும் என ஒரு விளம்பரத்தை வெளியிட்டு 1 மில்லியன் டாலருக்கு ஏலத்திற்கு விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விளம்பரம் சர்வதேச ஏல இணையதளத்தில் இன்னும் செயல்பட்டு வருவதாகவும் இதுவரை இது யாருக்கும் விற்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.கடந்த சில நாட்களாக, விளம்பரத்தின் ஸ்கிரீன் ஷாட்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து,பிஎஸ்ஜி அணிக்காக விளையாட இரண்டு ஆண்டுகளுக்கு அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்