இந்திய சீனியர் கூடைப்பந்து அணியில் இடம்;3 தமிழக வீராங்கனைகள் சாதனை..!

இந்திய சீனியர் கூடைப்பந்து அணியில் மூன்று தமிழக வீராங்கனைகள் இடம் பெற்று சாதனைப் புரிந்துள்ளனர்.
தமிழ்நாடு கூடைப்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக 3 வீராங்கனைகள், ஒரே நேரத்தில் இந்திய சீனியர் கூடைப்பந்து அணியில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
நாகபட்டினத்தை சேர்ந்த சகோதரிகளான சத்யா, புஷ்பாவுடன், சென்னையை சேர்ந்த நிஷாந்தி ஆகிய மூவரும் ஜோர்டானில் நடைபெறும் ஆசியக் கோப்பை கூடைப்பந்து சாம்பியன் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனால்,இவர்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.ஏனெனில்,கூடைப்பந்து இந்திய சீனியர் அணியில் 3 தமிழக வீராங்கனைகள் இடம் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025