இந்த வருஷம் மிஸ்ஸே ஆகாது…முரட்டு லைன் அப்பில் ஹைதராபாத்!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடவுள்ள வீரர்கள் பற்றிய விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் விளையாடி காட்டியது என்றே சொல்லலாம். குறிப்பாக, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிராக 287 ரன்கள் எடுத்து சாதனை படைத்தது.
கடந்த சீசனில் அதிரடியாக விளையாடிய போதிலும் ஹைதராபாத் அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஐபிஎல் ரசிகர்கள் பலரும் 2024-ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணி தான் வெற்றிபெறும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது. இது ஹைதராபாத் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஆனால், கடந்த முறை கோப்பை மிஸ் ஆனது ஆனால் இந்த முறை மிஸ்ஸே ஆகாது என்கிற வகையில், அணியின் உரிமையாளர் காவியா மாறன் நடைபெற்ற மெகா ஏலத்தில் தரமான வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளார். எனவே, இந்த முறை யாரையெல்லாம் அணி ஏலத்தில் எடுத்துள்ளது? என்பது பற்றி பார்ப்போம்.
ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்
- முகமது ஷமி (ரூ. 10 கோடி)
- ஹர்ஷல் படேல் (ரூ. 8 கோடி)
- இஷான் கிஷன் (ரூ. 11.25 கோடி)
- ராகுல் சாஹர் (ரூ. 3.2 கோடி)
- ஆடம் ஜம்பா (ரூ. 2.40 கோடி)
- அதர்வா தைடே (ரூ. 30 லட்சம்)
- அபினவ் மனோகர் (ரூ. 3.20 கோடி)
- சிமர்ஜீத் சிங் (ரூ. 1.50 கோடி)
- ஜீஷன் அன்சாரி (ரூ. 40 லட்சம்)
- ஜெய்தேவ் உனத்கட் (ரூ. 1 கோடி)
- பிரைடன் கார்ஸ் (ரூ. 1 கோடி)
- கமிந்து மெண்டிஸ் (ரூ. 75 லட்சம்)
- அனிகேத் வர்மா (ரூ. 30 லட்சம்)
- எஷான் மலிங்கா (ரூ. 1.20 கோடி)
- சச்சின் பேபி (ரூ. 30 லட்சம்)
தக்க வைத்த வீரர்கள் : ஹென்ரிச் கிளாசென் (ரூ.23 கோடி), பேட் கம்மின்ஸ் (ரூ.18 கோடி), அபிஷேக் ஷர்மா (ரூ.14 கோடி), டிராவிஸ் ஹெட் (ரூ.14 கோடி), நிதிஷ் ரெட்டி (ரூ.6 கோடி) ஆகிய வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
கணிக்கப்படும் வீரர்கள் :
ஹெட், அபிஷேக், இஷான் (wk), நிதிஷ், கிளாசென், அபினவ், சச்சின், கம்மின்ஸ் (c), ஷமி, ஹர்ஷல், சாஹர்.
கடந்த முறையே அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் அணிக்கு தேவையான அதிரடி தொடக்கத்தை கொடுத்து இருந்தார்கள். இப்போது அவர்களுடன் இஷான் கிஷன், ஹர்ஷல் படேல், இணைந்துள்ள காரணத்தால் இந்த முறை கடந்த ஆண்டை விட அதிரடியான போட்டிகளை எதிர்பார்க்கலாம்.
பேட்டிங்கில் மட்டுமில்லை பந்துவீச்சில் கூட ஹைதராபாத் மிரட்டலான வீரர்களை எடுத்துள்ளது. வேகப்பந்துவீச்சுக்கு முகமது ஷமி, சுழற்பந்து வீச்சுக்கு ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா ஆகியோரை வைத்துள்ளதால் கண்டிப்பாக தரமான ஒரு அணியாக உள்ளது. இந்த ஆண்டு ஹைதராபாத் லெவெனை பார்த்த ரசிகர்கள் இந்த முறை கோப்பை மிஸ் ஆகாது என கூறி வருகிறார்கள்.