“இந்தியாவோட வெற்றி ரகசியம் இதுதான்”…மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா!
வரும் போட்டிகளில் திட்டமிட்ட பிளான் படி விளையாடி வெற்றிபெறுவோம் என இந்தியாவின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற பிறகு பேசியுள்ளார்.
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 7-வது போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் விளையாடுவதற்கு முன்பு இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதியது. அந்த போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தால் இரண்டாவது போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் தங்களுடைய இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
Read More- கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!
இந்த போட்டியில் அருமையாக செயல்பட்டு 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்று, 2024-ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. வெற்றிபெற்ற குஷியில், போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் துணைக்கேப்டன் ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சியுடன் வெற்றியின் ரகசியத்தை பற்றி பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” இந்த போட்டிக்கு முன்னதாக நாங்கள் பேசி வைத்திருந்த திட்டத்தை ஒன்றாக இணைந்து செய்த காரணத்தால் தான் இந்த வெற்றிகிடைத்துள்ளது. எங்களுடைய திட்டத்தை மிகவும் தெளிவாக செயல்படுத்தி நிதானமாக விளையாடினோம். டார்கெட் மிகவும் குறைவான டார்கெட் தான். நினைத்திருந்தால் கண்டிப்பாக ரன்ரேட் உயர்வதற்கு விரைவாகவே போட்டியை முடித்திருப்போம்.
ஆனால், எங்களுடைய நோக்கம் அனைத்தும் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெறவேண்டும் என்பதில் தான் இருந்தது. அதன்காரணமாக தான் நாங்கள் நிதானமாக விளையாடினோம். இந்த நேரத்தில் நான் என்னுடைய அணி வீராங்கணைகளை பாராட்ட வேண்டும். ஏனென்றால், நான் என்னுடைய விக்கெட்டை இழந்த பிறகு அவர்கள் மிகவும் நிதானமாக விளையாடினார்கள்.
திட்டமிட்டபடி நாங்கள் செய்திருந்த பிளானை பின்பற்றி விளையாடிய காரணத்தால் எங்களுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஒரு உத்வேகம் கிடைத்திருக்கிறது. எனவே, இனிமேல் வரும் போட்டிகளிலும் நாங்கள் அந்த உத்வேகத்தை கடைப்பிடிப்போம்” என மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார் ஸ்மிருதி மந்தனா.