“சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்” நடக்க காரணம் இதுதான் .!

Default Image
  •  ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி “சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் ” நடத்தப்பட்டு வருகிறது
  • இந்த தொடரில் சச்சின் ,சேவாக்,பிரையன் லாரா ,சந்தர்பால், பிரெட் லீ,தென் ,ஜான்டி ரோட்ஸ்,முரளிதரன், தில்ஷன் உள்ளிட்ட 110 வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் 1.5-2 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்திய சாலைகளில் வாகன விபத்துக்களால் இறக்கின்றனர். ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு நபர் இறக்கிறார். சாலை விபத்துக்களால் நாட்டில் ஒவ்வொரு நாளும் 1,214 விபத்துக்கள் நிகழ்கின்றன.

இந்தியாவில் கிரிக்கெட்டை அதிகம் பார்க்கப்படும் விளையாட்டாக உள்ளது. எனவே கிரிக்கெட் வீரர்களை வைத்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் , சாலைகளில் நடத்தை குறித்து மக்களின் மனநிலையை மாற்றுவதற்காகவும் இந்த தொடர் நடைபெறுகிறது.

இந்த தொடர் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி “சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் ” நடத்தப்பட்டு வருகிறது.இந்த டி -20 தொடரில் இந்தியா , தென்னாப்பிரிக்கா,ஆஸ்திரேலியா , இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய 5 அணிகளில் ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாட உள்ளனர்.

இந்த தொடரில் சச்சின் ,சேவாக்,பிரையன் லாரா ,சந்தர்பால், பிரெட் லீ,தென் ,ஜான்டி ரோட்ஸ்,முரளிதரன், தில்ஷன் உள்ளிட்ட 110 வீரர்கள்விளையாடி வருகின்றனர்.இந்த தொடர் மும்பையில் நேற்று தொடங்கியது.வருகின்ற 16-ம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரை மகாராஷ்டிர மாநிலத்தில் சாலை பாதுகாப்பு துறையும் , சந்த் பாரத் சுரக்‌ஷித் பாரத் என்ற அமைப்பும் இணைந்து நடத்துகிறது.

இந்த போட்டியின் போட்டியின் மூலம் கிடைக்கும் வருவாய், சாலை பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த தொடருக்கு டைட்டில் ஸ்பான்சராக “Unacademy ” என்ற நிறுவனம் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்