கிரிக்கெட் வீரர்களில் அதிக ரசிகர்களை கொண்டவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் கேப்டன் ஆக இருந்து பல சாதனைகள் படைத்துள்ளார். ஐசிசி போட்டிகளின் அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி மட்டும் தான். இவரை “கேப்டன் கூல்” என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். காரணம் இவர் போட்டியின் போது மைதானத்தில் வைத்து வீரர்கள் மீது கோவப்படுவதில்லை.
இவர் இந்த வருடம் நடந்து முடிந்த உலககோப்பைக்கு பின் எந்த வித தொடரிலும் விளையாட வில்லை. உலகக்கோப்பைக்கு பின் தனது ஓய்வை அறிவிப்பார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தோனி அது பற்றி எந்த அறிவிப்பும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் உலகக்கோப்பைக்கு பின் முதல் முறையாக தோனி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் , “நானும் மற்றவர்களை போல சாதாரண மனிதன் தான் எனக்கும் கோபம் வரும். ஆனால் மற்றவர்களை விட கோபத்தை கட்டுப்படுத்துவதால் எனது கோபம் வெளியே தெரிவதில்லை.
நானும் சில சமயங்களில் வெறுப்பு அடைவேன் ஆனால் அதனை பற்றி சிந்திக்காமல் விரைவில் அதில் இருந்து வெளியே வந்து விடுவேன்.பின்னர் அதற்கான தீர்வை தேடுவதில் தான் எனது எண்ணம் இருக்கும். அதுவே எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த வழியாக கையாள்கிறேன் என்று கூறினார்.”
உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைத்தால் தான் நல்ல தீர்வு கிடைக்கும். முடிவை நினைத்து செயல்பட்டால் அது அதிக நெருக்கடியை தரும் ஆகையால் நான் முடிவை நினைத்து செயல்பட மாட்டேன். ஒரு அணியின் கேப்டன் என்பவர் அனைவரிடமும் ஒன்றாகவும் நேர்மையுடனும் செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…