‘இதுவே எங்கள் நோக்கம்’ .. திறமையாளர்களை அடையாளம் காணும் ‘பைச்சுங் பூட்டியா’!
இந்திய அணியின் முன்னாள் கால்பந்து கேப்டனான பைச்சுங் பூட்டியா, தற்போது இளம் கால்பந்து வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் இறங்கியுள்ளார்.
சென்னை : தற்போதைய நாளில் இந்தியாவில் கால்பந்தில் திறைமையுடைய பல இளைஞர்கள் தங்களை விளையாடும் ஏதேனும் ஒரு தொடரின் மூலமாக நிருபதி கொண்டே வருகின்றனர்.
இப்படி பல திறமைவாய்ந்தவர்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து அடுத்த கட்ட கால்பந்து விளையாட்டுக்கு தயார் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இந்திய முன்னாள் கால்பந்து ஜமாபவனான பைச்சுங் பூட்டியா.
இவர் இதற்காகவே பிரத்தேயகமாக BBFS கால்பந்து பள்ளிகள் வைத்து நடத்தி வருகிறார். இந்திய கால்பந்து அணியில் இடம் பெறுவதற்கு ஏவுதளமாக இவரது BBFS கால்பந்து பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது, நாடு முழுவதும் உள்ள திறமை வாய்ந்த கால்பந்து வீரர்களை தேர்வு செய்து, இந்த பள்ளியில் பயிற்சியளிக்க தேடுதலில் இறங்கி உள்ளார் பூட்டியா.
இம்மாதம் தொடங்கவிருக்கும் இந்த நாடு தழுவிய திறமை தேடல் (Talent hunt Workshop) , ஜலந்தர், பாட்டியாலா, பதிண்டா, சண்டிகர், அமிர்தசரஸ், மைசூரு, மங்களூரு மற்றும் பெங்களூரு உள்ளிட்ட 50 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த Talent hunt ஒர்க்ஷாப்பில், 9 முதல் 18 வயது வரை உள்ள 6,000 வீரர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நகரங்களிலும் 150-க்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டு தங்கள்து திறமையை வெளிக்காட்ட உள்ளனர். இம்மாதம் தொடங்கவிருக்கும் இந்த தேடுதல் பயணம் சுமார் 7 மாதங்களுக்கும் மேல் பல கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் BBFS இல் பயிற்சி பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சமீபத்தில் பேசிய பைச்சுங் பூட்டியா, “இளைஞர்களின் வளர்ச்சியில் தொடங்கி இந்திய கால்பந்தில் இனி வரும் காலங்களில் உறுதியான அடித்தளம் தேவை. பெரிய நகரங்களில் இருந்து வந்தாலும் சரி, தொலைதூரப் பகுதிகளில் இருந்து வந்தாலும் சரி.
இளம் கால்பந்து வீரர்களை தரவரிசையில் முன்னேற்றுவதற்கான பாதைகளை உருவாக்குவதே எங்கள் நோக்கம்,” என்று பைச்சுங் பூட்டியா பேசி இருந்தார். இவரது இந்த முயற்சிக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு என்பது கிடைத்துள்ளது.