“இனிமே நீங்க தான்”…ரிங்கு சிங்கிற்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கும் கொல்கத்தா?
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு ரிங்கு சிங் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற வகையில், பல தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக, இந்த வீரர்களை அந்த அணிகள் ஏலத்தில் எடுக்கப் போகிறது அந்த அணிக்கு இந்த வீரர் தான் அடுத்த ஆண்டு கேப்டன் என்கிற வகையில் தகவல்கள் வெளியாகிக் கொண்டு உள்ளது.
அந்த வரிசையில், தற்போது கொல்கத்தா அணிக்கு அடுத்த ஆண்டு ரிங்கு சிங் கேப்டனாக செயல்பட அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு கொல்கத்தா அணியைச் சிறப்பாக வழிநடத்திய ஷ்ரேயாஸ் ஐயர் இறுதிப்போட்டியில் அணிக்குக் கோப்பையையும் வென்று கொடுத்தார். ஆனால், அவரே இந்த முறை தன்னை அணி நிர்வாகத்திடம் தக்க வைக்க வேண்டாம் எனக் கூறினார்.
இதன் காரணமாகக் கொல்கத்தா அணி மெகா ஏலத்திற்கு முன்னதாக தங்களுடைய அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஹர்ஷித் ராணா மற்றும் ரமன்தீப் சிங் ஆகியோரை தக்கவைத்துள்ளதாக அறிவித்த இருந்தது. எனவே, அனுபவம் வாய்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இந்த முறை இல்லாததால் யார் அடுத்ததாகக் கொல்கத்தா அணியை வழிநடத்தப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்தது.
இந்த சூழலில், கொல்கத்தா அணியை அடுத்த ஆண்டு ரிங்கு சிங் தான் கேப்டனாக வழிநடத்தப் போகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமின்றி, அவரை இந்த முறை அணிக்கு கேப்டனாக விளையாட வைக்க முடிவு செய்து தான் அணி நிர்வாகம் அவரை இந்தமுறை தாக்கவும் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கேப்டனாக விளையாடிய அனுபவம் ரிங்கு சிங்குக்கு பெரிய அளவில் இல்லை என்றாலும், பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தபோதே அதிரடியாக விளையாடி தான் ஒரு சிறந்த வீரர் என்பதை நிரூபித்தார். எனவே, கேப்டனாக பொறுப்பு வழங்கப்பட்டு வாய்ப்பு கொடுத்தால் அதனையும் சிறப்பாக செய்யவார் என்பதால் அணி நிர்வாகம் இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் இனிமே நீங்க தான் கொல்கத்தாவுக்கு என வாழ்த்துக்கள் கூற தொடங்கிவிட்டார்கள்.
இன்னும் ரிங்கு சிங் தான் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டன் என அறிவிக்கப்படவில்லை. உண்மை என்னவென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டும் தான் தெரியவரும். மேலும், கொல்கத்தா அணிக்காக 46 போட்டிகளில் விளையாடி ரிங்கு சிங் 893 ரன்கள் குவித்து சிறப்பான சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.