கவனீச்சீங்களா? இந்த 2 நாடு ஒலிம்பிக் போட்டியில் இல்லை! ஏன் தெரியுமா?
பாரிஸ் ஒலிம்பிக் : நடப்பாண்டில் நடைபெற்று வரும் 33-வது ஒலிம்பிக் போட்டியானது பிரான்ஸ் நாட்டின் தலை நகரமான பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3-வது நாளான இன்று ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நடைபெற்று வரும் இந்த பாரிஸ் ஒலிம்பிக் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடிவருகின்றனர். ஆனால் இந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க 2 நாடுகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு நாடு ரஷியா, அமெரிக்கா மற்றும் சீனாவை போல ரஷியாவும் பதக்கங்களை கைப்பற்றுவதில் வல்லவர்கள்.
ஆனால், இந்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் ரஷ்யா நாட்டிற்கு தடை விதித்துள்ளனர். அதற்கு காரணம் எதிரான போரில் ஈடுபடுவதால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டை தொடர்ந்து ரஷியாவுக்கு ஆதரவாக இருந்து, உக்ரன் போருக்கு உதவும் பெலாரஸ் நாட்டிற்கும் இந்த நடப்பாண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் துவங்குவதற்கு, ஒரு வாரத்திற்கு முன்னரே அமைதிப் பேச்சு வார்த்தையை ரஷியா துவங்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிபந்தனை விதித்து இருந்த நிலையில் அதனை ரஷியா, பெலாரஸ் நாடுகள் ஏற்கவில்லை. இதன் காரணமாகவே வேறு வழியில்லாமல் ரஷியா மற்றும் பெலாரஸ் நாடுகளை தடை விதித்துள்ளதாக ஒலிம்பிக் கமிட்டியால் கூறப்படுகிறது.