இவர ‘கோட்’னு சொல்றதுல தப்பே இல்ல ..! உலக சாதனை படைத்த மெஸ்ஸி ..!

Lionel Messi

லியோனல் மெஸ்ஸி : கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வந்த கோபா அமெரிக்கா தொடரில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி கொலம்பியா அணியை 1-0 என வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. தற்போது இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி உலக சாதனையை படைத்திருக்கிறார்.

மேலும், இவர் 3 சர்வேதச கால்பந்து கோப்பைகள் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற இதே கோபா அமெரிக்கா தொடரில் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக செயலாற்றி அந்த தொடரின் கோப்பையை வென்றார். அதன்பின் 2022-ம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை தொடரில் இறுதி போட்டியில் ஃபிரான்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றார்.

அதனை தொடர்ந்து தற்போது இந்த ஆண்டில் தற்போது நடைபெற்று முடிந்த கோபா அமெரிக்கா தொடரை கைப்பற்றி இருக்கிறார். ஒரு கேப்டனாக 3 கோப்பைகளை கைவச படுத்தி சாதித்து காட்டியிருக்கிறார். அவரது ஒட்டு மொத்த கால்பந்து கேரியரில் இது 45-வது கோப்பையாகும். அதாவது, க்ளப் போட்டிகள், உள்ளூர் போட்டிகள் மற்றும்,  சர்வேதச போட்டிகள் என எல்லாவற்றையும் சேர்த்து மொத்தம் 45 கோப்பைகளை வென்றுள்ளார்.

இது போன்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்தது இல்லை. அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டனான டீகோ மரடோனாவை போல ஒரு வெற்றி கேப்டனாக தன்னை நிரூபித்து கேட்டிருக்கிறார் மெஸ்ஸி. மேலும், கடந்த 4 வருடத்தில் மட்டும் 3 சர்வதேச கோப்பைகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்