நான் திரும்பி வந்துட்டேனு சொல்லு! டி20-யில் களமிறங்கும் கிங் கோலி!

ViratKohli

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதனுடைய முதல் போட்டி கடந்த 11-ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற உள்ள இரண்டாவது போட்டயில் இந்தியா விளையாடுகிறது. இந்த இரண்டாவது போட்டி நாளை இந்தூரில் இருக்கும் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தங்க சங்கலியை விற்று கிரிக்கெட் கிட்! அம்மா குறித்து துருவ் ஜூரல் எமோஷனல்!

இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விராட் கோலி பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளார். கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் தான் விளையாடினர்.

அதனை தொடர்ந்து நீண்ட மாதங்களுக்கு பிறகு நாளை நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாடவுள்ளார். ஏற்கனவே, முதல் போட்டியில் விராட் கோலி விளையாட இருந்தார். ஆனால், தனிப்பட்ட காரணங்களுகாக அவரால் விளையாட முடியாமல் போய்விட்டது.

பிறகு அவர் இரண்டாவது டி20 போட்டியில் விளையாடுவார் என கூறப்பட்ட நிலையில், அதனை போலவே, அவர் இரண்டாவது போட்டியில் விளையாட இந்தூருக்கு வந்துள்ளார். அதற்கான வீடியோக்களும் புகைப்படங்களும் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி கொண்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்