ஒரே போட்டியில் ஆக்ரோஷமாக இரண்டு சதம் விளாசிய வீராங்கனைகள் ..!
இலங்கை மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர். முதலில் டி20 போட்டியில் விளையாடி வருகின்றனர்.நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை பறிகொடுத்து 217 ரன்கள் எடுத்தது. 218 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி 176 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
One game, two stunning hundreds ????
What a start to the #AUSvSL T20I series ???? pic.twitter.com/Y9d1Kh3LYe
— T20 World Cup (@T20WorldCup) September 29, 2019
இப்போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி 61 பந்தில் 113 ரன்கள் அடித்தார். அதில் 20 பவுண்டரி அடங்கும். மேலும் இலங்கை அணியில் கேப்டன் சமாரி 66 பந்தில் 113 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரி 6 சிக்சர்கள் அடங்கும்.இந்நிலையில் டி20-யில் ஒரே போட்டியில் இரண்டு வீராங்கனைகள் ஒரே ரன்கள் அடித்து சதம் விளாசி இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.